பேருந்து முன்னுரிமை ஒழுங்கை சட்டம் இன்று முதல் அமுலில்!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரங்களில் பேருந்து ஒழுங்கை நடைமுறை இன்று (14) முதல் மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணி முதல் ஒழுங்கை நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, காலிவீதி , ஹைலெவல் வீதி, பேஸ்லைன் வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர முதல் கோட்டே வரையான வீதிகளில் இன்று முதல் பேருந்து ஒழுங்கை நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை மீறுகின்ற சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts