நேபாளத்தில் நிலச்சரிவு: 18 பேர் பலி!

நேபாளத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

நேபாளத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன.

இந்நிலையில், கனமழை காரணமாக சிந்துபால்சவுக் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மலை அடிவாரத்தில் உள்ள 18 வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன.

குறித்த நிலச்சரிவில் சிக்கி 18பேர் உயிரிழந்துள்ளதாகவும் 36 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts