இன்று அரிய வாய்ப்பு!

சர்வதேச விண்வெளி ஓட்டத்தை இலங்கை மக்கள் இன்றைய தினம் வெறுங் கண்களால் அவதானிக்க முடியும் என இத்தாலிய விண்வெளி வீரர் இக்னாசியோ மேக்னானி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளியோடம் இன்று இலங்கையில் வெறுங் கண்ணுக்கு (மேகங்கள் அல்லாத சந்தர்ப்பத்தில்) எல்லா இடங்களிலும் மாலை 6:44 மணிக்கு தெரியும் என்று இத்தாலிய விண்வெளி வீரர் இக்னாசியோ மேக்னானி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளியோடத்தில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள் ஒவ்வொரு நாளும் 16 சூரிய உதயங்களையும் சூரிய அஸ்தமனங்களையும் காணுகின்றனர்.

ஈசா கொலம்பஸ் ஆய்வகத்துடன் கூடிய சர்வதேச விண்வெளியோடம் ஈர்ப்பு விசையை மீறும் வேகத்தில் 400 கி.மீ உயரத்தில் பறக்கிறது. அதாவது மணிக்கு 28 ஆயிரத்து 800 கி.மீ வேகம் ஆகும்.

அது  பூமியை முழுமையாக சுற்று செய்ய 90 நிமிடங்கள் மாத்திரமே எடுக்கிறது.

Related posts