நியூ டயமன்ட் கப்பல் கரைக்கு கொண்டுவரப்படுமா?

New Diamond கப்பலின் மீட்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகளும் நாளை (14) சட்ட மா அதிபரை சந்திக்கவுள்ளனர்.

கப்பலை கரைக்கு கொண்டுவருவதா, இல்லையா என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.

கப்பலை அவ்வாறு கரைக்கு கொண்டுவருவதாக இருந்தால், அதற்குரிய செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

நாட்டின் கடல் வளத்திற்கு பாதகம் ஏற்படாத வகையில், தீர்மானமொன்றும் எடுக்கப்படவுள்ளது.

தீப்பற்றிய MT New Diamond கப்பலின் மீட்பு பணிகளில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருடனும் இடம்பெறும் முதலாவது கலந்துரையாடல் இதுவெனவும் கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

Related posts