23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,195 ஆக அதிகரித்துள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 19 பேர், குவைட் நாட்டிலிருந்து வருகைத் தந்த 2 பேர், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்குமே இவ்வாறு கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,983 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் 40 ஆயிரத்து 401 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக கொவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

முப்படையினரால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 95 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில், 57 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 6 ஆயிரத்து 21 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 14 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,983 ஆக அதிகரித்துள்ளது.

Related posts