வவுனியாவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நேர்முக தேர்வு!

கடந்த யுத்த காலத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும், முகமாகவும் பொதுமக்களின் சுயதொழில் செயற்பாட்டை அதிகரிப்பதற்காகவும் குறைந்த வட்டி வீதத்தில் கடனுதவிகளை வழங்குவதற்காகவும் செயற்திட்டத்தை இழப்பீட்டிற்கான அலுவலகம் முன்னெடுத்துள்ளது.

இச் செயற்பாடு (11) அன்று இடம்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் (11) அன்று வவுனியா மாவட்டத்திலிருந்து சுயதொழில் கடனுக்காக விண்ணப்பித்திருந்த 230 பேருக்கான நேர்முகத் தேர்வு நடவடிக்கைகள் மாவட்ட செயலகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு கடன் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு இழப்பீடுகளுக்கான அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

அரச வங்கிகளுாடாக வழங்கப்படும் இச் சுயதொழில் ஊக்குவிக்கும் கடனுதவிக்கு இழப்பீட்டு அலுவலகத்தின் உதவிப்பணிப்பாளர் திஸ்ஸநாயக்க, மாவட்ட உதவி பிரதேச செயலாளர் சபர்ஜா மற்றும் இலங்கை வங்கி முகாமையாளர் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர் .

Related posts