போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை!

போதைப்பொருளுக்கு அடிமையான 8,000 சிறைக்கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதனை தவிர, போதைப்பொருளுக்கு அடிமையான பாடசாலை மாணவர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்படவுள்ளது.

இதற்காக உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் லக்நாத் வெலகெதர இந்த உப குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளர்.

இளைஞர் விவகாரம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோரும் உப குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

Related posts