பேஸ்புக் களியாட்டத்தில் கலந்துகொண்ட 30 பேர் கைது!

நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் நடைபெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த களியாட்ட நிகழ்வில் 153 பேர் கலந்து கொண்டுள்ளதுடன், தனது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறியவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கஞ்சா மற்றும் வௌிநாட்டு சிகரெட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts