இரண்டே வாரங்களில் தொப்பையை குறைக்க சூப்பரான வழிகள்!!

தினமும்  கண்ணாடியை பார்க்கும் போது, முதலில் முகத்தைப் பார்த்தப் பின் வயிற்றைத் தான் பார்ப்போம். அப்படி எப்போதெல்லாம் கண்ணாடியைப் பார்க்கிறோமோ, அப்போதெல்லாம் அனைவரது முகமும் சுருங்கும். ஏன் என்று தெரியுமா? உடலுக்கு ஏற்ற வயிறு இல்லாமல், கர்ப்பிணி போன்று வீங்கி இருப்பதாலே ஆகும். அதே சமயம் அனைவரது மனதிலும் இனிமேல் நாம் கடுமையான டயட்டை பின்பற்றி, ஒல்லியாக மாற வேண்டுமென்ற எண்ணமும் எழும். ஆனால் சிலரைப் பொறுத்தவரை அது வெறும் பேச்சாக இருக்கும். சிலரோ சரியாக சாப்பிடாமல், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காதவாறு டயட் இருப்பார்கள். ஆனால் அப்படி கடுமையான டயட் இல்லாமல், மிகவும் ஈஸியாக, டயட்டில் இருப்பது போன்றே தெரியாதவாறு, எப்போதும் இருப்பது போல் சாதாரணமாக இருந்தாலே தொப்பையை குறைக்கலாம் என்று சொன்னால், அதிலும் இரண்டே வாரங்களில் எளிதாக தொப்பையைக் குறைக்கலாம் என்று சொன்னால் நம்பமாட்டோம். ஆனால் அந்த வழியைக் காண அனைவரும் ஏங்குவோம். என்ன சரி தானே!

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, அப்படி இரண்டே வாரங்களில் தொப்பையை குறைப்பதற்கான ஒருசில அருமையான வழிகளை உங்களுக்காக பரிந்துரைக்கிறது. அதைப் படித்து அவற்றை பின்பற்றி தொப்பையை இரண்டே வாரங்களில் குறையுங்கள்.

நன்கு தூங்கவும்

நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள்.

உப்பை தவிர்க்கவும்

தொப்பை குறைய வேண்டுமானால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிப்பதோடு, தொப்பையை குறைக்க தடையாக இருக்கும். எனவே உணவில் உப்பை அளவை குறைக்கவும்

Related posts