இரண்டரை மணித்தியாலங்கள் ஐஸ் பெட்டிக்குள்ளிருந்து புதிய உலக சாதனை! (காணொளி)

ஆஸ்திரியாவைச் சேரந்த ஒருவர். இரண்டரை மணித்தியாலங்கள் ஐஸ் பெட்டியொன்றுக்குள் இருந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

ஜோசெப் கோபேர்ல் என்பவர், கடந்த சனிக்கிழமை, ஆஸ்திரியாiவின் மேல்க் நகரில் இச்சாதனையை படைத்தார்.

2 மணித்தியாலங்கள், 30 நிமிடங்கள், 54 விநாடிகள் அவர் ஐஸ் நிரப்பப்பட்ட கண்ணாடிப் பெட்டியொன்றுக்குள் இருந்தார்.  இதன்போது நீச்சலுடை ஒன்றை மாத்திரம் அவர் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 200 கிலோகிராம் எடையுள்ள ஐஸ் கட்டிகள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ் நிரப்பப்பட்ட பெட்டிக்குள் நீண்ட நேரம் இருப்பதில் இதற்கு முன்னரும் ஜோசெப் கோபேர்ல் தான் உலக சாதனையாளராக விளங்கினார். அவர் 2019 ஆம் ஆண்டு சுமார் 2 மணித்தியாலங்கள் இவ்வாறு இருந்து சாதனை படைத்திருந்தார். தற்போது தனது சொந்தச் சாதனையை 30 நிமிடங்களால் ஜோசெப் கோபேர்ல் முறியடித்துள்ளார்.

Related posts