யாழ் மக்களுக்கு ஓர் நல்ல செய்தி!

கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட ஸ்ரீ தேவி கடுகதி ரயில்சேவை   இன்று முதல் வாரநாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இத்தகவலை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும ஸ்ரீ தேவி கடுகதி ரயில்சேவை  தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த ஸ்ரீ தேவி கடுகதி ரயில்சேவை இன்று முதல் வாரநாட்களிலும் வழமைபோல் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ தேவி கடுகதி புகையிரத சேவையானது , தினமும் கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரையான புகையிரத சேவையை வழங்குகிறது .இப் புகையிரதமானது தனது பயணத்தை தினமும் மாலை 15.55 ற்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து தொடங்கி அதே தினத்தில் இரவு 22.21 ற்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை அடையும் வகையில் நேர அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல் தினமும் காலை 03.45ற்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து தொடங்கி காலை 10.24ற்கு (6 மணி 39 நிமிடங்களில்) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை அடையும்.

Related posts