மீண்டும் காலநிலையில் மாற்றம்- வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு சபரகமுவ, மேல், வடமேல், ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலிய மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டிலும் இடையிடையே மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts