பாசிக்குடா கடலில் மூழ்கி மாணவன் பலி!

மட்டக்களப்பு – பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (11) மாலை இடம்பெற்ற சம்பவத்தில், வாழைச்சேனை- செம்மன்ஓடை 4 பிரிவு ஹிஸ்புல்லா வீதியைச் சேர்ந்த யாவாத் முகமட் றிஸ்வி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன், சம்பவதினமான நேற்று அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா கல்மலை கடல் பகுதியில் கடலில் நீராடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

Related posts