தோட்ட முகாமையாளரை எதிர்த்து போராட்டம்!

நுவரெலியா – ஹட்டன், செம்புவத்த தோட்ட தொழிலாளர்கள் இன்று (12) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  தோட்ட முகாமையாளரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தியே இத்தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பளத்தை குறைத்து, நிபந்தனைகளை விதித்து தொழிலாளர்களின் அடிவயிற்றில் அடிக்கும் முகாமையாளரை வெளியேற்றும்வரை போராட்டம் தொடரும் எனவும் தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts