MT New Diamond கப்பல் மாலுமி தனிமைப்படுத்தலில்!

தீ விபத்திற்கு உள்ளாகிய MT New Diamond கப்பலின் மாலுமி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொடர்பான வழிகாட்டுதலுக்கு அமைய, அவர் கல்முனையிலிருந்து காலிக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அங்கிருந்து தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடக பேச்சாளர், கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய குறித்த மாலுமி, கடற்படையினரை தனிமைப்படுத்தி வைக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஆறு நாட்களாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 57 வயது மதிக்கத்தக்க, பிலிப்பைன்ஸ் பொறியியலாளர் எல்மோர்  கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடற்படையினரால் கடந்த வெள்ளிக்கிழமை (4) மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 மணிநேர சத்திரசிகிச்சை, சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். சிறிநீதன் தலைமையிலான குழுவினரால் அளிக்கப்பட்டு பின்னர் அதிதிவீர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை (09) இரவு கொழும்பு லங்கா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட முன்னர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts