நாளை கொழும்பில் நீர் வெட்டு!

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு 10,11,12,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதிகளில் நாளை இரவு 10 மணி முதல் மறுநாள் முற்பகல் 10 மணி வரையில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts