நாட்டின் மருந்து தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய தீர்மானம் – ஜனாதிபதி!

நாட்டின் மருந்து தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய தெரிவித்துள்ளார்.

தரமான மருந்துகளை வெளிநாட்டுச் சந்தையிலும் பொதுமக்களுக்கும் மலிவு விலையில் வழங்குவதே இதன் நோக்கம். அனைத்து தயாரிப்புகளும் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் மற்றும் தரங்களுக்கு ஏற்ப தயாரிக்கப்படும்.

தற்போது நாட்டிற்கு தேவையான 85% மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுகிறது.

இதற்கான ஆண்டு செலவு சுமார் 130 பில்லியன் ரூபாவாகும். இந்நாட்டிற்குத் தேவையான மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்தால் நாட்டிற்கு ஆண்டுக்கு 60 பில்லியன் ரூபா சேமிக்கலாம். அதனுடன் தொடர்புடைய இலக்குகளை நாம் அடைய முடியும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

Related posts