நாடு திரும்பிய மேலும் 472 இலங்கையர்கள்!

கொவிட்-19 காரணமாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் முதலான நாடுகளில் சிக்கியிருந்த மேலும் 472 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடுதிரும்பினர்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 648 ரக விமானத்தில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 405 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேநேரம், கட்டார் – டோஹாவில் இருந்து அந்த நாட்டு விமான சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக விமானத்தில் 67 பேர் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலையத்திற்கான எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

அவர்கள் அனைவரையும், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி, தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது

Related posts