கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்வு!

கொவிட்-19 காரணமாக தமிழகத்தில் நேற்று 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, கொரோனா தொற்றினால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 168 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், நேற்றைய தினம் 5 ஆயிரத்து 528 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, வைரஸ் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 86 ஆயிரத்து 52 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, 6 ஆயிரத்து 516 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்த 23 ஆயிரத்து 231 ஆக அதிகரித்துள்ளது.

49 ஆயிரத்து 203 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

Related posts