காட்டு யானையின் தாக்குதலில் மாணவன் பலி!

கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹலரத்கிந்த பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

நேற்றிரவு (10) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் கிராந்துருகோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts