ஈராக்கில் இருந்து 2,200 அமெ. துருப்புகள் வாபஸ்!

ஈராக்கில் இருந்து மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமான அமெரிக்க துருப்புகள் அடுத்த ஒரு சில வாரங்களுக்குள் வாபஸ் பெறப்படும் என்று மத்திய கிழக்கிற்கான முக்கிய தளபதியான ஜெனரல் கென்னத் மக்கன்சி அறிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாதத்திற்குள் தற்போது நிலைகொண்டிருக்கும் துருப்புகளின் எண்ணிக்கை சுமார் 5,200இல் இருந்து 3000 வரை குறைக்கப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எஞ்சி இருக்கும் வீரர்கள் இஸ்லாமிய அரசு ஜிஹாதிக் குழுவுக்கு எதிராக ஈராக் பாதுகாப்பு படைகளுக்கு ஆலோசனை மற்றும் உதவிகளை தொடர்ந்து வழங்கவுள்ளனர்.

கூடிய விரைவில் ஈராக்கில் இருந்து அனைத்து துருப்புகளையும் வாபஸ் பெற திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் பக்தாதில் ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் ஈரான் இராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டது தொடக்கம் அமெரிக்க துருப்புகள் ஈராக்கில் நிலைகொள்வதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Related posts