இன்றுடன் 19 ஆண்டுகள்!

அமெரிக்காவில் சுமார் 3,000 உயிர்களை பலி வாங்கிய 9/11 தீவிரவாத தாக்குதலின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டம்பர் 11).

இதே நாளில்தான் அமெரிக்க நேரப்படி சரியாக காலை 8.45 மணிக்கு நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு டவர் பகுதியில் கடத்தப்பட்ட விமானம் ஒன்று மோதியது.

உலகத்தின் போக்கையே மாற்றி அமைத்த சம்பவம் அது. அதன் பிறகு உலகெங்கும் பல அமைப்புகள் தடை செய்யப்பட்டன.

குறித்த தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 19 வருடங்கள் கடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிறரது உயிரை பறித்துக்கொண்டு தனது உயிரையும் இழக்கும் நபர்களால் (தற்கொலைத் தாக்குதல்) இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts