அதிபரால் தாக்கப்பட்ட மாணவன்!

களுத்துறை வடக்கு பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் தாக்கியதில் காயமடைந்த மாணவன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட மாணவர் தரம் 07இல் கல்வி கற்பவர் என கூறப்பட்டுள்ளது.

குறித்த வகுப்பை சேர்ந்த 06 மாணவர்களை அதிபர் தாக்கிய நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவரே மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts