பொது மக்கள் சேவைக்கு புதிய தினம் அறிவிப்பு!

அரச நிறுவனங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் பொது மக்கள் சேவை தினமாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் அரச நிறுவனங்களில் சேவையாற்றும் அனைத்து அரசாங்க ஊழியர்களும் தங்களது அலுவலகத்தில் இருப்பதுடன் அன்றைய தினம் பொதுமக்கள் சேவை தினமாக அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், திங்கட்கிழமையை பொதுமக்கள் சேவை தினமாக அறிவித்து முன்வைக்கப்பட்ட யோசனை அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதேவேளை, நெல் தவிர்ந்த ஏனைய பயிர்செய்கைக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு சலுகை விலையில் பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 50 கிலோகிராம் அளவிலான உர மூடை ஒன்றினை ஆயிரத்து 500 ரூபாய் என்ற சலுகை விலையில் விவசாயிகளுக்கு வர்த்தக நிலைங்களில் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts