திருகோணமலை, சல்லிமுனை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, வெடிபொருட்களுடன் இருவரை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் நேற்று (09) இச்சோதனை முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு கடற்படை கட்டளை பிரிவினருடன் குச்சவெளி பொலிஸார் இச்சோதனையை முன்னெடுத்தனர். இதன்போது வெடிபொருட்களுடன் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.