டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கருத்து!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹெரிஸ் உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்காவுக்கு அவமானம் என அந்த நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடன் களமிறங்கி உள்ளார்.

உப ஜனாதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹெரிஸ் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வடக்கு கரோலினாவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய டொன்ல்ட் டிரம்ப், எதிர்க்கட்சியின் உப ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹெரிஸ் தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்காவுக்கு அவமானம் என குறிப்பிட்டுள்ளார்.

கமலா ஹாரிசை மக்கள் விரும்பவில்லை என்றும், அவர் ஒருபோதும் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக வர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கமலா ஹெரிஸ், ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் இருந்து வெளியேறிய பிறகும், எதிர்வரும் தேர்தலில் பிடென் அவரை தனது உப ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்துள்ளார்.

ஏனென்றால் அவர்கள் கலிபோர்னியாவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவேன டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Related posts