சடலம் அடையாளம் காணப்பட்டது!

நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ பாலத்திற்கு அருகில் தியவன்னா ஓயவிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

74 வயதுடைய ஹோகந்தர சிங்ஹபுர பகுதியில் வசிப்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி உறவினர்களுக்கு அறிவிக்காமல் அவர் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என அவரின் புதல்வர் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts