கிளிநொச்சியில் காதல் ஜோடி தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு!

காணாமல்போயிருந்த காதலர்கள் 7 நாள்களின் பின் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களது சடலங்கள் பரந்தன் ஓவிசியர் கடைச் சந்திக்கு அண்மையாகவுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றுக்குள் பழுதடைந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி குமரபுரத்தைச் சேர்ந்த இளைஞனும் திருநகரைச் சேர்ந்த இளம் பெண்ணுமே கடந்த 3ஆம் திகதி முதல் காணாமற்போயிருந்த நிலையில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts