ஊடகவியலாளர் சடலமாக மீட்பு!

தலவத்துகொடை – குமாரகேவத்தை பீரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள்ளிருந்து ஆங்கில நாளிதழில் கடமையாற்றும் ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

60 வயதுடைய திருமணமாகாத ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐந்து தினங்களாக அவர் பணிக்கு திரும்பவில்லை என்பதோடு அவரின் உயிரிழப்பில் சந்தேகம் காணப்படுவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

அவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளாரா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Related posts