வெள்ளத்தில் கொழும்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக பல வீதிகள்  மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நேற்று இரவு 10 மணி முதல் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையுடன் பலத்த காற்று வீசி வருவதால் கொழும்பின் முக்கிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வீதியோரங்களில் உள்ள மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் கிராண்ட்பாஸ், மாளிகாவத்தை, வோட் பிளேஸ், பேஸ்லைன் மற்றும் தும்முல்ல உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வெள்ளநீர் நிரம்பியுள்ளது.

இந்நிலையில், கொழும்பு – நவகம்புர பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts