நாத்தாண்டியா நகர் நீரில் மூழ்கியது!

நாத்தாண்டியா நகரின் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. எமில்டன் ஆறு பெருக்கெடுத்ததால் வௌ்ள நீர் அப்பகுதியிலுள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், வீதிகள் என்பனவற்றுள் உட்புகுந்ததுடன், தாழ் நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளனவென, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

வீதிகளிலுள்ள நீர் வடிந்தோடாமையால், போக்குவரத்து நடவடிக்கையை முன்னெடுப்பதில், பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts