75 மில்லியன் 5G ஐபோன்களை உற்பத்தி செய்யும் அப்பிள்!

அப்பிள் நிறுவனத்தின் உற்பத்தியாளர்கள் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட சுமார் 75 மில்லியன் ஐபோன் திறன்பேசிகளைத் தயார்செய்து வருகின்றனர்.

அந்தப் புதிய திறன்பேசிகளோடு புதிய ரக அப்பிள் கைக்கடிகாரம், ஐபேட் ஏர் போன்றவையும் தயார்செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்குள் சுமார் 80 மில்லியன் புதிய திறன்பேசிகள் தயாராகும் என அப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

அது அடுத்த மாதத்தில் 5ஜி பொருத்தப்பட்ட 4 புதிய வகை ஐபோன் திறன்பேசிகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அவை வெவ்வேறு வடிவமைப்பையும் வெவ்வேறு அளவுகளில் கைபேசித் திரைகளையும் கொண்டிருக்கும்.

மேலும், புதிய ஐபேட் ஏர் கருவியையும் அந்த நிறுவனம் தயார் செய்து வருகிறது. அதில் மேம்படுத்தப்பட்ட திரை பொருத்தப்படடுள்ளது.

அதோடு 2 புதிய வகை அப்பிள் கைக்கடிகாரங்கள், புதிய வகைக் காதொலிக் கருவி ஆகியவற்றையும் அது வெளியிடவுள்ளது.

Related posts