இலங்கையரிடம் கட்டணங்களை அறவிடாதிருக்க சவுதி தீர்மானம்!

சவுதி அரேபியாவில் இருந்து வௌியேறும் இலங்கையர்களிடம் எவ்வித கட்டணங்களையும் அறவிடாதிருக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது நிலவும் கொரோனா அபாய நிலைமை காரணமாக சவுதி அரசாங்கம் தற்காலிகமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா எடுத்த இந்த தீர்மானத்தை இலங்கை வௌிவிவகார அமைச்சு பாராட்டியுள்ளது.

Related posts