யாழில் பழைய வாள்களுடன் ஒருவர் கைது!

பல வருடங்கள் பழையதான வாள்கள் நான்குடன் ஒருவர் வடலியடைப்பு பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவரிடம் மீட்கப்பட்ட 4 வாள்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கைது நடவடிக்கை இன்றிரவு(6) இடம்பெற்றது.
பல ஆண்டுகள் பழமையான குறித்த 4 வாள்களையும் விற்பனை செய்வதற்கு சந்தேக நபர் முற்பட்டுள்ளார். இந்த முயற்சி யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப் படையினருக்கு தெரிய வந்ததையடுத்து வாள்களை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் நேற்று (6) அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts