
போர்த்துக்கேயர்,ஒல்லாந்தர்,ஆங்கிலேயர் ஆகிய அந்நியரின் படையெடுப்புக் காலங்களில் சைவம் அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆலயங்களை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. அந்த வகையில் கந்தவன சுப்பிரமணியர் தேவஸ்தானத்தையும் அழிப்பதற்கு வந்த கூலிப்படையினர் வன்னிமரம் காணப்படும் வடதிசையில் அழகான நறுமணம் கமழும் பூக்களைக் கண்டு அவற்றை கொய்து முகர்ந்த போது கண்கள் பார்வையை இழக்க கோயிலை உடைக்க முடியாது திரும்பிச் சென்றார்கள்.
பழையவர் என அழைக்கப்படும் சண்முகப் பெருமான் அன்னியரின் ஆட்சிக் காலத்தில் இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் குமரபுரம் எனும் ஆலயத்தில் இருந்து கடலினுாடாக வாணிபம் செய்பவா்களின் மரக்கலத்தினனூடாக மறைத்துக்கொண்டுவந்து இங்கு பிரதிஸ்டை செய்யப்பட்டது
மஹா மண்டபத்தில் வீற்றிருந்து அருளாட்சி கொண்டிருக்கும் சண்முகப்பெருமான்ஆலயத்திலேயே கருவூட்டப்பட்டு மிகவும் அழகானவாராக வார்த்தெடுக்கப்பட்டது. இதற்காக முருகனடியார்கள் தங்க நகைகளை தாமாக முன் வந்து ஈகை செய்தார்கள். எம் பெருமானின் தெய்வீகவருளால் ஆறுமுகங்களும் வேறுபாடின்றி ஒரேமாதிரி அழகாக காட்சியளிக்கிறார். அவரைப் பார்க்கும் அடியார்களைப் பார்த்து புன்முறுவல் செய்வது போல காட்சி கொடுத்து அடியார்களின் முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்து அருளாட்சி செய்கின்றார்.
அருநகிரிநாதர் கந்தவன சுப்பிரமணியர் மீது ”உறவு சிங்கிகள்” எனும் அடியுடன் தொடங்கும் திருப்புகழைப் பாடியுள்ளார்.
முன்னொரு காலத்தில் தேர் உற்சவத்தின் போது தேர் வடக்கு வீதியை அடைந்தபோது தேர் நகராது நின்று போனது வடக்கில வீற்றிருக்கும் சல்லியம்பதிப் விநாயகப் பெருமான் ஆலயம் சென்று அவருக்குக் காணிக்கை கொடுத்து வேண்டியபோது தேர் நகரத் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வெரு வருடமும் தேர் உற்சவத்தின் போது சண்முகர் தேரில் ஆரோகணம் செய்ய முன்னர் சல்லியம்பதிப் விநாயகப் பெருமானுக்கு நைவேத்தியம் எடுத்துச் சென்று வழிபடும் மரபு முறையுள்ளது.
திருவாமகரூர் தேரழகு கந்தவனத்து வீதியழகு என்று அன்று தொட்டு இன்றும் கூறப்படுகிறது. இவ்வாறு கந்தவனத்து வீதியழகை எடுத்துக் கூறுகிறார்கள்
மகப்பேறு வேண்டி கந்தவனம் மீது தவமிருந்து இங்கு கிடைக்கும் மாங்கனியை உண்டு மகப்பேறு பெற்றுள்ளார்கள். இன்னும் மகப்பேற்றை வேண்டி அடியார்கள் அம் மாங்கனியை பெறுவதற்காக ஆலய தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கந்தவன சண்முகப் பெருமானை கரியான வேலவர், கந்தவனக்கடவை, கந்தாரணியம், நயினார்,ஆறுமுகன் எனனும் பல நாமங்கள் கொண்டு அழைக்கின்றனர்.
கந்தவனப் பெருமானின் மகோற்சவங்களை ஊர்மக்களும் அயலூர் மக்களும் பங்கேற்று சிறப்பாக விழாவெடுத்து அவரின் அருளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
வருடாந்த மகோற்சவம் ஒவ்வொரு வருடமும் ஆனித் திங்கள் பூரணை திதியை தீர்த்தோற்சவமாக கொண்டு முதல் பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடைபெறும்.
கந்த சஷ்டி உற்சவமும் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து சட்டி முடிவுறும் வரை உற்சவம் நடைபெறும்.