களனி பகுதியூடான ரயில் சேவை பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களனி பகுதியூடான ரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் வீசிய பலத்த காற்று காரணமாக ரயில் தண்டவாளங்களில் மரம் முறிந்து வீழ்ந்துள்ள காரணத்தினால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களனி ரயில் பாதையில் ரயில்கள் தாமதமாகும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை காணப்படும். காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts