இலங்கையில் 240,000 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகள்!

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண நாட்டில் இதுவரை 240,000 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது மொத்தமாக 241,631 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 1,724 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts