அமெரிக்கா, இந்தியா, சீனாவுக்கு புதிய தூதுவர்கள்!

சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கான புதிய தூதர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி சீனாவின் பீஜங்கிற்கான இலங்கையின் புதிய தூதுவராக வெளியுறவு அச்சின் முன்னாள் செயலாளரான பாலித கோஹனவை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அவரது நியமனம் குறித்த விபரங்களை உயர் பதவிகள் குறித்த குழுவின் அங்கீகாரத்துக்காக அனுப்பியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை வெளிவிவகார செயலாளராகப் பதவிவகித்த, சர்வதேச உறவுகளில் நீண்டகால அனுபவம்கொண்ட மூத்த இராஜதந்திரி ரவிநாத ஆரியசிங்க வொஷிங்டனின் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவராக கடமையாற்றிய ரொட்னி பெர்னாண்டோ இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கடந்த அரசாங்க காலப் பகுதியில் பல அமைச்சுப் பதவிகளை வகித்த மிலிந்த மொறாகொட இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

Related posts