New Diamond கப்பலில் பரவிய தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
New Diamond கப்பலின் மீட்பு நடவடிக்கைகளுக்காக விசேட நிபுணர் குழு இன்று (06) காலை நாட்டை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை 6.50 மணியளவில் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்ததாக, விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.