வவுனியாவில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் குருதிப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக இரத்ததான முகாம் நேற்று (05) இடம்பெற்றது.

நெளுக்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் குறித்த இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

நெளுக்குளம் இளைஞர்கள் மற்றும் பொது அமைப்பான அன்பாலயா அமைப்பின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரத்ததான முகாமில் 30க்கு மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts