வடக்கு பிரீமியர் லீக் நேற்று ஆரம்பம்!

வடக்கு மாகாணத் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரீமியர்லீக் சுற்றுப்போட்டிகள் நேற்று(5) வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பமானது.

வடமாகாணத் துடுப்பாட்டச் சங்கத்தலைவர் யோ.ரதீபன் தலைமையில் இந்த சுற்றுப்போட்டிகள் ஆரம்பமானது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட அணிகளும் இதில் பங்குபற்றின.

மட்டுப்படுத்தப்பட்ட இருபது பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட இந்தப் போட்டியில், நேற்று(6) காலை வவுனியா மற்றும் முல்லைத்தீவு மோதிய முதலாவது போட்டியில் வவுனியா வெற்றியீட்டியிருந்தது. நேற்று(5) மாலை வவுனியா மற்றும் மன்னாருக்கிடையான போட்டி இடம்பெற்றது.

சுழற்சிமுறையில் இடம்பெறும் இந்தப்போட்டி ஒக்டோபர் 4 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இறுதிப் போட்டியும் அன்றையதினமே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts