டயமண்ட் கப்பல் தீப்பரவல் குறித்து விசாரிக்க இங்கிலாந்து நிபுணர்கள் குழு வருகை!

எரிபொருள் சரக்குகளை இந்தியாவுக்கு கொண்டு செல்லும் போது, இலங்கை கடற்பரப்பில் திடீரென தீப்பிடித்த நியூ டயமண்ட் கப்பல் சம்பவம் குறித்து விசாரிக்க இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர் குழு இன்று இலங்கை வந்துள்ளது.

இன்று காலை 6.55 மணிக்கு இங்கிலாந்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் இந்த குழு மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

10 பேர் கொண்ட இந்த குழு தற்போது நியூ டயமண்ட் விசாரணைக்காக புறப்பட்டுள்ளது.

மேலும், குறித்த கப்பலின் கேப்டன் மற்றும் குழுவினரிடமிருந்து அறிக்கைகள் பெறப்படவும் உள்ளன.

Related posts