காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என்பதால், நாளை பி.ப 12 மணி வரை, சிறிய மீன்பிடிப் படகாளர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு, அரசாங்க தகவல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமென, வளி மண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.