MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள்!

இலங்கைக்கு கிழக்கே உள்ள கடற்பரப்பில் தீப்பிடித்த, MT New Diamond எனும் பாரிய எண்ணெய் தாங்கி கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்திய கரையோர பாதுகாப்புப்படை இதனை அறிவித்துள்ளது.

அதில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் (03) முதல் இந்திய கரையோர பாதுகாப்புப்படையுடன் இணைந்து இலங்கை கடற்படை மற்றும் வான்படையினர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் மாலை 7.00 மணியளவில் அதில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 270,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயுடன் அனர்த்தத்திற்கு உள்ளான இக்கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் மூலம், பாரிய அசம்பாவிதம் மற்றும் கடல் சுற்றாடல், கடல் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக, சூழலியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Related posts