வவுனியா தனிமைப்படுத்தலில் இருந்து சொந்த இடங்களுக்கு திரும்பிய 164 பேர்!

சிங்கப்பூர் நாட்டில் சிக்கித்தவித்த 164 இலங்கையர்கள் விசேட விமானங்களின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு, வவுனியா வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இன்று (05) தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 164 பேர் தமது சொந்த இடங்களுக்கு கொரோனா தொற்றில்லையென உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சிங்கப்பூர் நாட்டிலிருந்து வருகை வந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து அவர்களது சொந்த இடங்களான மாத்தறை, காலி, கொழும்பு, கண்டி, பேராதெனியா, மாத்தளை  அனுராதபுரம் போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts