வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கனடாவில் நடைபயணம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கனடாவில் வாழும் தமிழர்கள், தலைநகர் ஒட்டாவா நோக்கி நடைபயணமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான கடந்த 30 ஆம் திகதி இந்த நடைபயணம் ஆரம்பமானது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிக்கான நெடுநடை பயணம் எனும் தொனிப்பொருளிலில் இந்த நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பறை இசை முழக்கத்துடன் இந்த நெடுநடைப் பயணம் முன்னெடுக்கப்படுகின்றது.

எதிர்வரும் 14 ஆம் திகதி கனேடிய தலைநகர் ஒட்டாவாவை இவர்கள் சென்றடையவுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts