மணல் ஏற்றிவந்த இளைஞர்கள் மீது பொலிஸார் தாக்குதல்!

மணல் ஏற்றிவந்த இளைஞர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் காயமடைந்த 3 இளைஞர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிவந்தபோது பொலிஸார் வழிமறித்துள்ளனர். எனினும் உழவு இயந்திரத்தை நிறுத்தாமல் தப்பி ஓடுவதற்கு முயற்சித்த நிலையில் துரத்தி பிடித்த பொலிஸார்,

அதில் பயணம் செய்த இளைஞர்கள் மீத மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞனின் பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டிருந்தனர்.

Related posts