நவம்பரில் ரஜினி கட்சி துவக்கம் : மதுரையில் முதல் மாநாடு!

நடிகர் ரஜினி நவம்பர் மாதம் அரசியல் கட்சி துவங்குவது உறுதி எனவும் மதுரையில் மாநாடு நடத்த உள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கால் நூற்றாண்டிற்கும் மேலாக நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி தமிழகத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ‘இப்போது இல்லை என்றால் இனி எப்போதும் இல்லை’ என அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கு அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ரஜினியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் 12ல் சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ”மாற்றம் வேண்டி மக்களிடம் எழுச்சியும் அலையும் வரட்டும் அரசியலுக்கு வருகிறேன்” என கூறியிருந்தார்.

Related posts