ஜப்பானை தாக்க காத்திருக்கும் சக்திவாய்ந்த சூறாவளி!

ஜப்பானின் தென் மேற்கில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கமானது நிலை கொண்டுள்ளமையினால், மழை, காற்று மற்றும் அதனால் உண்டாகும் அனர்த்தங்கள் தொடர்பில் அவதனமாக இருக்குமாறு அந் நாட்டு வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.

சூறாவிளியானது ஞாயிற்றுக்கிழமைக்குள் ஒகினாவாவையும் அதன் பின்னர் தெற்கு தீவான கியுஷுவையும் அணுகுவதால் ஜப்பான் வானிலை ஆய்வு நிலையம், ஒகினாவா மற்றும் கியுஷுவில் வசிப்பவர்களை அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மணிக்கு 198 கிமீ (123 மைல்) வரை காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூறாவளியின் மையம் சனிக்கிழமையன்று ஒகினாவாவின் பிரதான தீவின் கிழக்கே மினாமிடைடோ அருகே இருந்தது, வடக்கே 30 கி.மீ (19 மைல்) வேகத்தில் நகர்ந்தது.

சூறாவளியிலிருந்து சேதத்தைத் தடுக்க, கியுஷு ரயில்வே, தனது சில ரயில் நடவடிக்கைகளையும் ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும் நிறுத்தி வைத்துள்ளது.

Related posts