அல்வாய் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று நடைபெற்ற இளைஞருக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில் பொலிகை ஐக்கியம் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து பொலிகை ஒற்றுமை விளையாட்டுக் கழகம் போட்டியில் ஈடுபட்டது. தண்ட உதை மூலம் தனது வெற்றியை சுவீகரித்துக்கொண்ட பொலிகை ஒற்றுமை விளையாட்டுக் கழகம் . பின்னர் மாலையில் மனோகரா விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து தமது திறமைகளை காட்டி தமது வெற்றியினை இலகுவாக அடைந்ததன் மூலம் அசையாத வெற்றியினைப் பெற்றனர்.
இதில் சிறப்பு என்னவெனில் பொலிகை ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தில் 9 பேர் மட்டுமே தமது அணிக்காக விளையாடி வெற்றியீட்டியமை சிறப்பம்சமாக விளையாட்டு ரசிகர்களால் பார்க்கப்படுகின்றது.
பின்னர் நடைபெற்ற போட்டியில் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தை தண்ட உதை மூலம் வெற்றி பெற்ற பொலிகை ஒற்றுமை விளையாட்டுக் கழகம் நாளை இறுதிச் சுற்றில் வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 விளையாட்டுக்கழகங்கள் இவ்விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்டிருக்கின்றது.